Categories
விவசாயம்

நஞ்சில்லா உணவு…. வெற்றிநடை போடும் இயற்கை விவசாயி…. போதிய வருவாய் ஈட்டுவது எப்படி?… இதோ சுவாரசியமான தகவல்….!!!!

கொரோனா தொற்று காலத்திற்கு பின் உணவு மற்றும் விவசாயத்தின் அருமை பற்றி பலரும் உணர்கின்றனர். அதிலும் குறிப்பாக இயற்கை விவசாயத்தினுடைய அவசியம் குறித்து இன்றைய சமுதாயத்தினர் உணர்கின்றனர். ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தால் மட்டுமே லாபம் கிடைக்கும் என்ற தவறான புரிதலை உடைத்து, இயற்கை விவசாயத்தினை லாபகரமாக செய்ய முடியும் என விவசாயி பொன்முத்து என்பவர் நிரூபித்து இருக்கிறார்.

பல்லடத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் கெரடமுத்தூர் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தில் சென்ற 7 ஆண்டுகளாக அவர் 15 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார். வாழை, தென்னைமரம், தக்காளி, பொடிவெங்காயம் மற்றும் பழமரங்கள் உள்ளிட்ட பலப் பயிர் சாகுபடி முறையை அவர் பின்பற்றி லாபம் கண்டுள்ளார்.

ஆரம்பக்காலத்தில் ரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்த இவர், தனக்குள் ஏற்பட்ட ஒரு தேடலின் வாயிலாக இயற்கை விவசாயியாக மாற்றமடைந்துள்ளார். இயற்கை விவசாயம் சார்ந்து தனக்கு எழக்கூடிய பல்வேறு கேள்விகளுக்கு ஈஷாவின் வாட்ஸ்அப் விவசாய குழுக்கள் வாயிலாக விடை கிடைப்பதாக அவர் கூறினார். மேலும் நஞ்சில்லா உணவு அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்பதே என் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |