Categories
தேசிய செய்திகள்

நடக்கும் பாதையில் பாலியல் வன்கொடுமை என்றால் …படிக்கும் பள்ளியிலும் பாலியல் வன்கொடுமைதான் …!!

மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், பள்ளி ஆசிரியர்  கைது செய்யப்பட்டார்  .

ஆந்திராவின் மேற்கு கோதாவரியில் உள்ள Tadimalla என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது .இங்கு 8-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஒருவரிடம், அதே  பள்ளியிலேயே பணியாற்றி வரும் லட்சுமன் ராவ் என்ற ஆசிரியர் ஒருவர்  தொடர்ந்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டிருக்கிறார் . சில  நாட்களாக ஆசிரியருடைய தொல்லை அதிகரிக்க தொடர்ந்ததால் தன் வீட்டில் ,  சிறுமி அழுது கொண்டே தனக்கு ஆசிரியரால் நேரும் கஷ்டம்  குறித்து கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த  சிறுமியின் உறவினர்கள் மற்றும் தகவல் அறிந்த கிராம மக்கள் பள்ளிகூடத்திற்கு  முன் குவிந்து ஆசிரியர் லட்சுமன் ராவை கைது செய்ய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் .இத்தகவல் குறித்து  போலீசார்  சம்பவ இடத்திற்கு வந்து , வழக்குப் பதிவு செய்து, ஆசிரியரை தங்கள் காவலில் வைத்து  விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |