Categories
மாவட்ட செய்திகள்

“நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக்காதலியை அடித்து கொன்ற இளைஞர்”….. போலீசார் அதிரடி….!!!!!

நடத்தையில் சந்தேகப்பட்டு கள்ளக் காதலியை அடித்துக்கொன்ற இளைஞரை போலீசார் கைது செய்தார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள உமையாள்பதி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்கும் தமிழ்மணிக்கும் சென்ற 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி 2 மகன்கள் இருக்கின்றார்கள். இந்த நிலையில் தமிழ்மணி கணவர் மற்றும் மகன்களை பிரிந்து தனது தந்தை வீட்டில் தான் இருந்து அங்கிருக்கும் செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். அப்பொழுது செந்தில் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை தொடர்ந்து சென்ற சில மாதங்களாக இருவரும் குடும்பம் நடத்தி வந்த நிலையில் தமிழ்மணி நடத்தையில் செந்தில் சந்தேகப்பட்டு மது அருந்திவிட்டு அடிக்கடி சண்டை போட்டு இருக்கின்றனர்.

பின் தகராறில் செந்தில் ஆத்திரமடைந்து தமிழ்மணியை கையால் அடித்து மேலும் தலையை பிடித்து சுவரில் அடித்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்மணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை மறைப்பதற்காக செந்தில் பிரிட்ஜ் பக்கவாட்டில் மறைத்து வைத்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக டிவியை சத்தமாக வைத்து வீட்டில் அமர்ந்திருக்கின்றார். நேற்று முன்தினம் காலை செந்தில் வீட்டிலிருந்து நீண்ட நேரம் ஆகியும் யாரும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து போலீசார் அங்கு வரும்பொழுது தூரத்தில் இருந்து பார்த்த செந்தில் வீட்டின் பின்புறமாக தப்பித்து ஓடியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் தமிழ்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். பின் பொதுமக்கள் உதவியுடன் தப்பியோடிய செந்திலை போலீசார் விரட்டி பிடித்து விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்தார்கள்.

Categories

Tech |