கணவனே மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே பழைய கரிக்காட்டுகுப்பம் பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டை ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரத்துடு என்பவர் பராமரித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுஜாதாவின் நடத்தையில் சந்தேகப்பட்ட பரத்துடு அடிக்கடி அவருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து நேற்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு முற்றியதால் ஆத்திரத்தில் புடவையால் சுஜாதாவின் கழுத்தை நெரித்து பரத்துடு கொலை செய்தார். அதன் பிறகு பூச்சி மருந்தை குடித்து பரத்துடுவும் தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இவரை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரும் தன்னுடைய மனைவி அலமேலுவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்துள்ளார். அதன் பிறகு ரமேஷ் தானாகவே சென்று காவல்துறையில் சரணடைந்து விட்டார். மேலும் ஒரே நாளில் இருவர் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.