Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நடத்த கூடாதுன்னு சொல்லியும் இவங்க இப்படி பண்ணுறாங்க…. கிராம நிர்வாக அலுவலர் புகார்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் கோவில் திருவிழாவை நடத்திய நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் பேரையூரில் பிரசித்தி பெற்ற காளியம்மன், மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியிருக்கும் மக்கள் அனைவரும் மூலவரான அம்மனை தினமும் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் தற்போது கொரோனாவின் பரவல் அதிகமாக இருப்பதால் கோவில்களில் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனால் கிராம நிர்வாகத்தின் அலுவலரான பாரதி காளியம்மன், மாரியம்மன் கோவிலில் அளவுக்கதிகமான கூட்டம் கூட்டி சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ததாக கோவிலின் அறங்காவலர் மீதும், திருவிழா கமிட்டியினர் மீதும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |