நடிகை வனிதா இனிமேல் நான் யார் பெயரையும் பச்சை குத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகை வனிதா ஏற்கனவே 2 திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். அதன்பின் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஆனால் இவர்கள் தற்போது பிரிந்து விட்டனர்.வனிதா மற்றும் பீட்டர் பால் சேர்ந்து இருந்த போது வனிதா பீட்டர் பாலின் பெயரையும், பீட்டர் பால் வனிதாவின் பெயரை பச்சை குத்தி கொண்டுள்ளனர்.
இந்நிலையில் வனிதா குத்தியிருந்த பீட்டர்பாலின் பெயரை வேறொரு பெயர் போல் மாற்றி குத்திக் கொண்டார். அவர் மாற்றிக் குத்திக் கொண்ட டேட்டூ ஒரு சையின்ஸ் சிம்பிள் என்றும், அதற்கான அர்த்தம் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் வனிதா தெரிவித்திருந்தார்.இதுகுறித்து வனிதா ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, இனி வேற யார் பெயரையும் நான் பச்சை குத்த மாட்டேன். என் வாழ்க்கையில் உள்ள உறவுகள் மேலும் வலுவடைய வேண்டும் என்று இந்த டேட்டூவை நான் குத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.