அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் வாக்கிங் சென்றால் உடல் எடை குறையாது என தெரியவந்துள்ளது.
நம் அன்றாட வாழ்வில் உணவுப் பழக்கம் என்பது மிக முக்கியமானது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரித்து பல நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு உடல் எடை அதிகரித்த பெரும்பாலான மக்கள் தினமும் வாக்கிங் சென்றால் உடல் எடை குறைந்துவிடும் என்று செல்வது வழக்கம்.
ஆனால் அது தவறான கருத்து என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் பிரபல பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவில் , வாக்கிங் செல்வதால் உடல் எடை குறைய வில்லை என்று கண்டுபிடித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தினசரி நடைப் பழகுவது உடலை சுறுசுறுப்புடன் வைக்க உதவுமே தவிர, உடல் எடை குறையாது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மேலும் இது தொடர்பாக கூடுதல் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.