இளம் பெண்ணிடம் செல்போன் பறித்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டத்தில் உள்ள சொக்கனூர் சென்ட்ரல் பேங்க் வீதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நர்மதா(20) என்ற மகள் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் நர்மதா கோவைக்கு சென்று விட்டு கண்ணமநாயக்கனூரில் டவுன் பேருந்தில் வந்து இறங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து நர்மதா வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அவர் அப்பகுதியில் இருக்கும் ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் நர்மதாவின் தலையை தட்டி விட்டனர்.
பின்னர் நர்மதா சுதாரித்துக் கொள்வதற்குள் அவர்கள் நர்மதாவின் செல்போனை படித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த நர்மதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் செல்போன் பறித்த குற்றத்திற்காக மதுரை வீரன் கோவில் தெருவில் வசிக்கும் ராம்குமார் மற்றும் கதிர்வேல் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.