கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராசக்காபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்ற கல்லூரி மாணவியை மணிகண்டன் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.