கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளங்கோவில் பகுதியில் கூலி தொழிலாளியான நாகூரான் என்பவர் வசித்துவருகிறார். இவர் வேலைக்கு சென்றுவிட்டு பள்ளங்கோவில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் திடீரென நாகூரானின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகூரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் காரை ஓட்டி வந்த வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் நாகை மாவட்டத்தை சேர்ந்த அரவிந்தன் என்பது தெரியவந்துள்ளது.