சிறுத்தை நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. நேற்று முன்தினம் திம்பம் மலைப்பாதையில் இருக்கும் 23-வது கொண்டை ஊசி வளைவு அருகே இருக்கும் சாலையோர தடுப்பு சுவரில் சிறுத்தை ஒன்று நடந்து சென்றதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
ஆனால் யாரையும் கண்டு கொள்ளாமல் சிறுத்தை நடந்து அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்றது. இதற்கிடையில் சிறுத்தை நடந்து செல்வதை சிலர் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த காட்சிகள் தற்போது வேகமாக பரவி வருகிறது.