சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கூலித்தொழிலாளி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள சோளியக்குடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு பஞ்சு என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து காளிமுத்து மீது மோதியுள்ளது.
இந்த கோர விபத்தில் காளிமுத்து பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தொண்டி காவல்துறையினர் காளிமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் கார் டிரைவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.