மினி லாரி மோதிய விபத்தில் நடந்து சென்ற தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள ஆசாத் நகர் காளியம்மன் கோவில் தெருவில் கூலி தொழிலாளியான மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் வாய்க்கால் பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மாணிக்கத்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.