Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற மாணவி…. வற்புறுத்திய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மதுபோதையில் வாலிபர்கள் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோணம்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணன் தனது நண்பர்களான மணிகண்டன், சந்தோஷ், மூர்த்தி, சேகர் ஆகிய நான்கு பேருடன் இரவு நேரத்தில் மது குடித்துள்ளார். இதனையடுத்து மதுபோதையில் வாலிபர்கள் தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மூர்த்தியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் நான்கு பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |