Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. ஈரோட்டில் சோகம்….!!

விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் ஜான் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பெருந்துறை மேம்பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஜான் பாஷா மீது பலமாக மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த ஜான் பாஷாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜான் பாஷா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வளர்ப்பில் செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |