Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நடந்து போகும்போது…. “வடமாநில பெண்ணிடம் செல்போன் பறிப்பு”…. அடித்து உதைத்து சட்டையை கிழித்த மக்கள்…!!

வேலூரில் நடந்து சென்ற வடமாநில பெண்ணிடம் செல்போன் பறித்தவரை பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர்.

வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிய சிட்டிங் பஜாரில் 30 வயது மதிக்கதக்க வடமாநில பெண் ஒருவர் நடந்து போய் கொண்டு இருந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த 40 வயது மதிக்கதக்க ஒரு ஆண் திடீரென்று அந்தப் பெண் கையில் இருந்த செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தார். உடனே அந்தப் பெண் திருடன், திருடன் என்று கத்தி சத்தம் போட்டார்.

அவரின் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் அந்த நபரை விரட்டி மடக்கிப் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்த செல்போனை கைப்பற்றி சட்டை கிழியிற அளவுக்கு சரமாரியாக அடித்து உதைத்து உள்ளனர். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதற்குள் அந்த நபர் தப்பித்துச் சென்று விட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |