அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
அவரின் வருகை தமிழக அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா என்று அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “அதிமுகவினர் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி வெற்றியை உறுதி செய்ய வேண்டும். எத்தனை நூற்றாண்டு வந்தாலும் மக்களுக்காகவே அதிமுக இயங்கும் என்ற ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை பிரசாரம் துண்டு பிரசுரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.