நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி குழு 6வது வார்டு உறுப்பினர், எருமைப்பட்டி ஒன்றியக் குழு 15-ஆவது வார்டு உறுப்பினர், 3 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 10 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 15 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது.
இதனையடுத்து ஊராட்சிகுழு 6-வது வார்டுக்கான வாக்கு எண்ணும் பணிகள் வெண்ணந்தூர் அரசு பள்ளியிலும், மற்ற பதவிகளுக்கான பணிகள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் என 8 மையங்களில் நடைபெற்று வருகிறது. மேலும் வாக்கு எண்ணும் பணியில் 40 அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் காவல்துறையினரின் பாதுகாப்போடு நடந்து வருகிறது. இதன் முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.