Categories
தேசிய செய்திகள்

நடந்து முடிந்த ஏலம்…. எந்த நிறுவனம் வாங்கியது…? மத்திய அரசுக்கு இவ்ளோ கோடி வருமானமா…?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபடியான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் 1ஆம் தேதி தொலைதொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலம் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின் நடைபெற்றது. இந்நிலையில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை நடைபெற்ற ஏலத்தின் ஒதுக்கீடு விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ஒட்டுமொத்தமாக 77,815 கோடி கிடைத்துள்ளது. ஒதுக்கீட்டின்படி முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 57122.65 கோடி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை வாங்கியுள்ளது.

இரண்டாவதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் 18,699 கோடி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வாங்கியுள்ளது. அடுத்தபடியாக வோடபோன் ஐடியா நிறுவனம்  1,993.40 கோடி அலைக்கற்றை வாங்கியுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த ஏலத்தை அடுத்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த ஸ்பெக்ட்ரம் உரிமம் 55% விழுக்காடு அதிகரித்ததாக அறிக்கையில் கூறியுள்ளது.

Categories

Tech |