நடனமாடும் பெண்ணின் நடனத்தை பார்த்து அங்கு இருந்த நாய் ஒன்று அவரை உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நான்கு கால்களில் நடக்கும் நாய் இரண்டு கால்களில் நிற்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. காவல்துறையில் வளர்க்கப்படும் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் மட்டுமே இவ்வாறு சாத்தியமாகும். சில வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள் இரண்டு கால்களால் நின்று மனிதர்களுக்கு பாசத்தை வெளிப்படுத்தும்.
அப்படி வளர்க்கப்படும் நாய் ஒன்று நடனமாடும் பெண் ஒருவரை பார்த்து இரண்டு கால்களில் நின்று கைதட்டி ரசித்து உற்சாகப்படுத்துகிறது. ஸ்ரீஜித் திரிக்காரா என்பவர் ஃபேஸ்புக்கில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். பரதம் ஆடிக் கொண்டிருக்கும் இளம் பெண்ணை பார்த்து அதன் அருகில் சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் நாய் பெண் ஆடுவது போல இரு கால்களால் நின்று கைதட்டி ரசிக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.