Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடன இயக்குனருடன் இணைந்து அசத்தலாக டான்ஸ் ஆடிய சாயிஷா… வைரலாகும் வீடியோ… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை சாய்ஷா நடன இயக்குனருடன் இணைந்து டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகை சாயிஷா கடைக்குட்டி சிங்கம், காப்பான், வனமகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடிகர் ஆர்யாவை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் ஆர்யா-சாயிஷா நடிப்பில் ஓடிடியில் வெளியான டெடி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சாய்ஷா நடன இயக்குனர் ஒருவருடன் இணைந்து நடனமாடிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் , சாயிஷா நடிப்பில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி ரிலீஸான யுவரத்னா திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது . தற்போது இந்த படத்தில் இடம் பெற்ற பாடலின் படப்பிடிப்புக்காக டான்ஸ் மாஸ்டருடன் ஆடிய ரிகர்சல் வீடியோவை சாய்சா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களை கவர்ந்த இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.

Categories

Tech |