நடப்பு நிதியாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதம் உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக பொருளாதார பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் முனைப்புடன் சீனா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உலகின் பொருளாதார வலிமை மிகுந்த நாடுகளின் பட்டியலில் சீனா அழியாத இடத்தை பிடித்திருக்கிறது. கொரானா பெருந்தொற்றால் சர்வதேச பொருளாதார ஆட்டம் கண்டது ஆனால் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பெரும் அளவில் பாதிக்கப்படவில்லை என்றாலும் வளர்ச்சி கண்ட நாடுகளான அமெரிக்கா, சீனா போன்றவை பொருளாதார சற்று பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாடுகள் தங்களின் பொருளாதார வளர்ச்சியை காலாண்டு, அரையாண்டு போன்று பிரித்து மதிப்பீடு செய்து வருகின்றது.
அதன்படி நடப்பு நிதியாண்டில் 2022 கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 3.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே போல் நடப்பு 2022 ஆம் ஆண்டில் முதல் 9 மாதங்களில் சீனாவின் வளர்ச்சி மூன்று சதவீதமாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது பற்றி நிபுணர்கள் பேசும்போது சீனாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து இருந்தாலும் கொரோனா பாதிப்பால் குறைந்த அளவு வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. மேலும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டால் உலக நாடுகளில் தாக்கம் உண்டாகும். இதில் இந்தியாவும் அடங்குகிறது ஏனென்றால் சீனாவின் ஏற்றுமதி மற்றும் அந்த நாட்டுக்கான இறக்குமதி இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கிறது. இந்தியா சீனா இடையே இந்த பரஸ்பர வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதனால் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர்.