மத்திய ரயில்வே “ஜீரோ ஸ்கிராப் மிஷன்” என்ற திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மத்திய ரயில்வேயின் ஒவ்வொரு மண்டலம், ரயில்களை நிறுத்துமிடம் மற்றும் பணிமனை உள்ளிட்டவற்றில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை நீக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேவையற்ற பழைய பொருட்களை விற்றதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மத்திய ரயில்வேக்கு வருவாய் ரூ. 530.34 கோடி கிடைத்துள்ளது.
இது இதற்கு முன்னதாக கிடைத்த தொகையை விட 35.48% அதிகம். இதுவரை கிடைத்த வருவாயை விட நடப்பு நிதியாண்டில் பழைய பொருள்களை விற்றதில் கிடைத்த வருவாய் அதிகம். இதனால் மத்திய ரயில்வே, நிதியாண்டு 2021-22-ல் நிர்ணயித்த இலக்கான ரூ.400 கோடியை விட கூடுதலாக விற்பனை செய்து வருவாய் ஈட்டியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.