Categories
தேசிய செய்திகள்

நடமாடும் நகைகடையாக…. குஜராத்தில் வலம் வந்தவர் திடீர் தற்கொலை… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

நமது தமிழ்நாட்டில் ஹரிநாடாரை போல குஜராத்தில் உடம்பு முழுவதும் தங்க நகைகளுடன் வலம்வரும் குஞ்சால் பட்டேல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் என்ற பகுதியில் கழுத்தில் தங்க நகைகளும் கையில் பட்டை காப்புகள், கண்ணாடி கூட தங்கம் என்ற அளவிற்கு சுற்றிவரும் குஞ்சால் பட்டேல் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் அகமதாபாத்தில் சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்டார். அவர் தன்னுடைய வேட்புமனுவில் தன்னிடம் மொத்தம் 115 கிலோ தங்கம் இருப்பதாக தெரிவித்தார். அவர் உடம்பில் உள்ள தங்க நகைகள் மட்டுமே 50 கிலோ இருக்கும். தன்னுடைய காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து கவர்ச்சியான வேட்பாளராக சுற்றி வந்தார். ஆனால் அவர் அந்த தேர்தலில் வெற்றிபெறவில்லை.

வெறும் 1393 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தார். இந்த தேர்தல் இவர் நாடு முழுவதும் அறியப்பட்டார். தேர்தல் முடிந்தும் தனது தங்க நகைகளை அகற்றவில்லை. மேலும் கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களை செய்து வந்தார். வண்டி வாங்க கடன் கொடுத்து விட்டு பணத்தை திரும்ப செலுத்தாதவர்கள் இடமிருந்து வாகனத்தை எடுத்து வருவது தான் இவரது தொழில். இப்படி சுற்றித் திரிந்தவர் திடீரென்று தன் வீட்டில் இறந்து கிடப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. குஞ்சாலின் மரணம் அந்த மாநிலம் முழுவதிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |