கேரள சட்டசபையில் நேற்று அம்மாநில நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் 2022-2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் அனைத்து தொகுதிகளிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும். மீனவர்கள் மற்றும் பட்டியல் இன சமூகங்கள் உள்ளிட்ட விளிம்புநிலை பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.2,063,64 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இந்த அறிவிப்பு கேரள மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories