Categories
கிரிக்கெட் விளையாட்டு

விக்கெட் மழை….. “நடராஜன்” தான் இதுக்கு சரியான ஆளு”….. வெளியான முக்கிய கருத்து..!!

டி20 உலக கோப்பையில் தீபக் சஹாருக்கு மாற்றாக நடராஜன் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்துள்ளது. இதனையடுத்து 5 ஆவது போட்டியில் சிஎஸ்கே 200+ ரன்களை குவித்து பெங்களூரு அணியை வென்றுள்ளது. இந்த போட்டியை சிஎஸ்கே அணி வென்றதற்கு பேட்ஸ்மேன்களான ராபின் உத்தப்பா, ஷிவம் துபேவின் ஆட்டங்கள் தான் மூல காரணமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்க சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்ல இனி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது. இதற்கிடையே சிஎஸ்கே பந்துவீச்சில் தொடர்ந்து சொதப்பி வருவதற்கு அந்த அணியில் தீபக் சஹர் இல்லாததுதான் மூலகாரணமாக உள்ளது. இவர் அடுத்த 4 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபரில் டி20 உலக கோப்பை தொடங்க இருக்கிறது.. இந்த தொடரில் தீபக் சஹார் ஆடுவதற்கு வாய்ப்பு இல்லை… எனவே அவருக்கு பதிலாக மாற்று வீரர் கிடைத்து விட்டால் பிசிசிஐக்கு இது ஒரு பிரச்னையாக இருக்காது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்..

எனவே அந்த வீரர் இடது கை வேகப்பந்து வீச்சாளரான டி.நடராஜன் தான் என்று பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளார்கள். ஏனெனில் தற்போது வரை நடைபெறும் ஐபிஎல்லில் ஐதராபாத் அணிக்காக விளையாடும் நடராஜன் 5 போட்டிகளில் தொடர்ந்து 2/43, 2/26, 2/30, 2/34, 2/37 என்ற கணக்கில் தொடர்ந்து விக்கெட் மழையை பொழிந்துள்ளார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபரில் துவங்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரில் தீபக் சஹாருக்கு மாற்றாக நடராஜன் இடம்பெறுவது உறுதியாகி விட்டதாக பலரும் தெரிவித்துள்ளார்கள்.

Categories

Tech |