சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனக சபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக புகார் எழுந்து நிலையில், கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்..
கடலூர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. குறிப்பாக 17.05.2022 முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள், சாமி தரிசனம் செய்யலாம் என்று அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது கனகசபை மீது ஏறி வழிபட பக்தர்கள் ஆவலோடு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஒரு புகார் வந்துள்ளது.. அதாவது, கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் வந்தது.
அந்த புகாரின் அடிப்படையில் தற்போது கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதை யார் தடுக்கிறார்கள் என்பதற்காக 5 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை இந்து சமய அறநிலையத்துறை அமைத்துள்ளது. தினந்தோறும் ஒரு அலுவலர் அங்கு வந்து நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறதா? மறுக்கப்படுகிறதா என கண்காணிப்பார் எனவும், அப்படி தடுக்கப்பட்டால் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு அது குறித்து அவர் தகவல் கொடுக்கப்பட வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பு குழுவை சிதம்பரம் கோவிலில் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் கடந்த திங்கள்கிழமை முதல் அலுவலர்கள், கண்காணிப்பு மற்றும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு பணி முடிந்தவுடன் அறிக்கை அளிக்கவும் அலுவலர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது. பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி தரிசனம் செய்வதை உறுதி செய்ய 5 அலுவலர்களை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது..