செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, நாம் ஏற்கனவே சொன்னது போல ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரதின விழா முடிந்த பின்பு தமிழகத்தில் ஒரு வழக்கம் என்னவென்றால்…. அதற்கு பிறகுதான் மழைக்கு தயாராக எல்லா இடத்திலும் தூர்வார ஆரம்பிப்பார்கள், 2000 கிலோ மீட்டர் தூர்வாருவது அமைச்சர் 400 கிலோமீட்டர் 500 கிலோ மீட்டர் என்கிறார், எதற்காக இந்த மெத்தனம் ஆறு மாதம் இருக்கிறது ?
மழை வரப்போகுது என்று தெரிகிறது, ஒரு அடிப்படை தூர்வாரவேண்டிய விஷயத்தில் நீங்கள் குறைவாக செய்திருக்கிறார்கள். என்னதான் காரணம் சொன்னாலும் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதேபோல இரண்டாவது மிக முக்கியமானது அமைச்சர் கேட்கிறார் அப்ப நானே போய் மம்முட்டி எடுத்துட்டு போயி தூர்வார வேண்டுமா ? என்று அமைச்சர் கேட்கிறார், அதுவும் பத்திரிக்கை நண்பர்கள் முன்னாடி கேட்கிறார், அதை எப்படி ஒரு பதிலாக எடுத்துக்கொள்ள முடியும். எல்லாவற்றையும் தாண்டி அடிப்படை தயார் மழை வருவதற்கு முன்னாடி அரசு ஒரு அறிவிப்பை கொடுத்தார்களா?
இந்த மாதிரி மழை வருது, கன மழை வருது அரசே இதற்கு தயாராக இல்லை, கேட்டால் சம்பந்தமே இல்லாமல் ஒரு கம்யூனிஸ்ட் எம்பி வந்து ரேடார் சரி இல்லை அதனால் தான் மழை வருவது எங்களுக்கு தெரியவில்லை என்று சொல்கிறார். இந்த மாதிரி உப்புசப்பு காரணங்களை எல்லாம் தமிழ்நாட்டில் கொடுக்கிறார்கள். கனமழை வரும் என்று தெரியும், அடிப்படையா ? நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்ய தவறி விட்டீர்கள். அந்த வேலைகளை செய்து இருந்தால் 80 சதவீத பிரச்சினை வந்திருக்காது.
மத்தபடி இந்த ஊழல் புகார்கள் விஷயங்களில் எப்போதுமே பாரதிய ஜனதா கட்சி தலையிடாது. அது மாநில அரசு இருக்கக்கூடிய டி.வி.ஏ.சி அவர்களுக்கு விட்டது, அவர்கள் முறைப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ ஆதாரத்தின் படி எடுக்கட்டும். அது பாரதிய ஜனதா கட்சி அதற்கு பொறுப்பு கிடையாது நாம் சொல்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நீங்கள் எடுக்கவில்லை அது தான் காரணம் என்பது நம்முடைய குற்றச்சாட்டு என தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருப்பதால் திமுக நடவடிக்கை எடுக்க தயங்கும் என பல அரசியல் விமர்சகர்கள் நினைத்துக்கொண்டு இருந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக பேசியுள்ளது அதிமுகவின் முன்னாள் மாஜி அமைச்சர்களை அதிர வைத்துள்ளது.