Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்….. தீக்குளிக்க முயன்ற முதியவர்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் கிராமத்தில் தள்ளுவண்டி வியாபாரியான ராஜா(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் ராஜாவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது ராஜா கூறியதாவது, ரெட்டியூரில் 3 சென்ட் இலவச வீட்டு மனை எனது மனைவி சித்ராவின் பெயரில் கடந்த 2000-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. அந்த இடத்தில் நாங்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில் தர்மபுரி- ஓசூர் நான்கு வழி சாலை அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தினர் கொடுத்த நிலத்தை அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர். இதனால் மாற்றிய இடம் வழங்க வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. எனவே மாற்று இடத்தில் இலவச வீட்டுமனையும், குடியிருக்க விடும் கட்டித் தர மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜா கூறியுள்ளார். இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை ராஜா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.

Categories

Tech |