ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியான ரவிக்குமார் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அதில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனத் தலைவர் பொன் ரவி தலைமை தாங்கியுள்ளார்.
இதனையடுத்து 100க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் துணை சூப்பிரண்டு அதிகாரி பால்சுதிர் தலைமையில் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ரவிக்குமாரை தாக்கிய மர்ம நபர்களை கைது செய்ய துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னரே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியுள்ளது.