வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திராவிட தமிழர் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் திராவிட தமிழர் கட்சியினர் சார்பில் புளியங்குடி பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் வீரனூரில் உயிரிழந்த அருந்ததிய சமுதாயத்தை சேர்ந்த முதியவரின் உடலை பொதுபாதை வழியாக எடுத்து சென்றதால் சிலர் அப்பகுதியில் வசிப்பவர்களின் வீடுகளை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். ஆக இதனை கண்டித்தும், வீடுகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆர்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தென்மண்டல தலைவர் பொதிகை ஆதவன், மகளிர் அணி செயலாளர் முத்துமாரி, கொள்கை பரப்பு செயலாளர் க்றுனாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர், எஸ்.டி.பி.ஐ நகர செயலாளர் தமீம் அன்சாரி, மின்வாரிய மாவட்ட துணைத்தலைவர் பழனிசாமி, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் ராம்குமார் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.