ஆதித்தமிழர் பேரவையினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தின் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டம் ஆனது மாவட்டச் செயலாளர் புவைஸ்வரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த அருந்ததியர் மக்களின் சொத்துகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோசம் எழுப்பியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.