பெரியார் தொடர்பாக ரஜினி பேசியது பற்றி எல்லாம் விவாதிப்பது வீண் வேலை என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய திருமுருகன் காந்தி நேரில் பேச இயலாதவர்கள் நடிகரை வைத்து டப்பிங் செய்வதாக விமர்சித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் என்பது மனுதர்மத்தின் மறுஉருவம் என தெரிவித்த அவர் இச்சட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடர வேண்டும் எனவும் கூறினார்.