நடிகர்களின் சம்பளத்தை குறைக்க தயாரிப்பாளர்கள் தயங்குகிறார்கள் என பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் சுந்தரபாண்டியன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலமானார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். இந்நிலையில் தமிழக அரசின் சிறந்த கதையாசிரியருக்கான விருது சுந்தரபாண்டியன் திரைப்படத்திற்காக இவருக்கு கிடைத்துள்ளது. இது குறித்து அவர் பேட்டியில் கூறியுள்ளதாவது, சுந்தரபாண்டியன் படத்திற்கு கதை எழுதும் பொழுது விருது கிடைக்கும் என எழுதவில்லை. விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. பெரும்பாலான மக்கள் பேருந்தில் பயணிப்பதால் படத்தில் இருக்கும் பேருந்து பயண காட்சிகள் அனைத்து பார்வையாளர்களையும் கதைக்குள் இழுத்துச் சென்று விட்டது.
தற்பொழுது சசிக்குமாரை வைத்து முந்தானை முடிச்சு ரீமேக் செய்து வருகின்றேன். மேலும் ரெக்கை முளைத்தேன், கொலைகார கைரேகைகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளேன். தெலுங்கு சினிமாவில் நடிகர், நடிகைகளின் உதவியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட நடிகர்களே சம்பள தர வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்ததை நான் வரவேற்கின்றேன். தமிழ் சினிமா உலகில் இது குறித்து அனைத்து தயாரிப்பாளர்களின் மனதில் எண்ணம் இருந்தாலும் இந்த பேச்சை முதலில் யார் எடுப்பது என தயக்கம் இருக்கின்றது. தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தை குறைக்க தயங்குகின்றார்கள் என கூறியுள்ளார்.