Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அசோக் செல்வனின் புதிய படம்… அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் தெகிடி, கூட்டத்தில் ஒருவன் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும் கடந்த வருடம் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதன்படி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை விஷால் வெங்கட் எழுதி இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் அபிஹாசன், ரித்விகா, ரேயா, அஞ்சு குரியன், கே.எஸ்.ரவிக்குமார், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரதன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |