தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில், நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு துணிவு திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா, காசேதான் கடவுளடா, கேங்ஸ்டா போன்ற பாடல்கள் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் விஜய் தான் என்று கூறிய நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளார். அதன்படி தில் ராஜுவின் ராதாகிருஷ்ணன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வைசாக் மற்றும் நிஜாம் ஆகிய பகுதிகளில் துணிவு படத்தை வெளியிடவுள்ளது. மேலும் தில் ராஜு துணிவு படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.