நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கிய ஹெச் வினோத் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிறந்த நாள் அன்று அதாவது மே 1-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது . இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.