Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அஜித் கைப்பட எழுதிய கடிதம்…. எதற்கு தெரியுமா?…. வைரல்….!!!

“AK 61” படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ள நிலையில் நடிகர் அஜித் கேரளாவில் கடந்த சில தினங்களாக தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது அந்த சிகிச்சை முடிந்துள்ள நிலையில் தனக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித் தனது கைப்பட எழுதியுள்ள கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தக் கடிதத்தில் நடிகர் அஜித், அன்புள்ள உன்னிகிருஷ்ணன் மற்றும் கிருஷ்ணதாஸ் நன்றி. நீங்கள் இருவரும் உங்களின் குழுவினரும் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு, விருந்தோம்பல் மற்றும் அக்கறைக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |