நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே படத்தின் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தள்ளிப் போகாதே . ஜெயம் கொண்டான், சேட்டை, பூமராங் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
#ThalliPogadhey Censored with U/A ❤️#UAForThallipogadhey @atharvaamurali @anupamahere @sidsriram @amitashpradhan @Dir_kannanR @KabilanVai @GopiSundarOffl @masalapix @mkrpproductions @DoneChannel1 @digitallynow pic.twitter.com/uL0ODuq5II
— kannan (@Dir_kannanR) April 28, 2021
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் தள்ளிப் போகாதே படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.