நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அதர்வா தற்போது குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, தள்ளிப் போகாதே, அட்ரஸ் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் தள்ளிப் போகாதே படத்தை ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தள்ளிப் போகாதே படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுதபூஜை பண்டிகையன்று தியேட்டர்களில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே தினத்தில் தான் எனிமி, அரண்மனை-3 ஆகிய படங்களும் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.