நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அதர்வா. தற்போது இவர் நடிப்பில் தள்ளிப்போகாதே திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயம் கொண்டான், இவன் தந்திரன், பூமராங் போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நின்னுக்கோரி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்நிலையில் தள்ளிப் போகாதே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.