Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா?… வெளியான கலக்கல் புகைப்படம்… ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்…!!!

நடிகர் அருண் விஜய் தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் தொடர்ந்து நல்ல நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த விஜய்க்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து இவர் நடிகர் அஜித்துக்கு வில்லனாக நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது . கடைசியாக அருண் விஜய் நடிப்பில் வெளியான மாபியா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது .

தற்போது இவர் சினம், அக்னி சிறகுகள் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகும் படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதைப்பார்த்த ரசிகர்கள் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியமடைந்துள்ளனர் .

Categories

Tech |