நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது குடும்பத்தினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாபியா திரைப்படம் வெளியாகியிருந்தது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் பாக்சர், அக்னிசிறகுகள், பார்டர், சினம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தஞ்சை மாவட்டத்தின் கிராமங்களில், ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தவர்கள் எனது தந்தையும் தாயும் என்பதில் பெருமை அடைகிறேன்.
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்!!💪🏼🙏🏼
நமது கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைப்போம்..#myculturemypride pic.twitter.com/Jw6HNRZkf5— ArunVijay (@arunvijayno1) June 5, 2021
மேலும் அருண் விஜய் இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்தினருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.