Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய்யின் ‘அக்னி சிறகுகள்’… வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!!

அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னி சிறகுகள் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகர் அருண் விஜய் பாண்டவர் பூமி, மலை மலை, இயற்கை, மாஞ்சா வேலு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தடம், மாபியா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அருண் விஜய் அக்னி சிறகுகள், பாக்சர், சினம், பார்டர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அருண் விஜய் அக்னி சிறகுகள் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் நவீன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |