Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் அருண் விஜய் நடிப்பில் “தமிழ் ராக்கர்ஸ்”…. இணையத்தில் வெளியான டிரைலர்…. செம வைரல்….!!!

பிரபல நடிகரின் வெப் தொடர் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான யானை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க, பிரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு அருண் விஜய் தற்போது அறிவழகன் இயக்கத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.

இதில் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், வினோதினி வைத்தியநாதன், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த தொடரை ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த தொடர் பொழுதுபோக்கு துறை சைபர் கிரைமின் இருண்ட பக்கத்துடன் எவ்வாறு போராடுகிறது என்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெப் தொடரின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |