நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டீஸர் ரிலீஸாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி. இதைத்தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் போன்ற வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள டைரி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் .
#DiaryTeaser Hope you all like it 🙂🙂🙂🙏🙏🙏 @innasi_dir @RonYohann@AravinndSingh @5starcreationss @5starkathir
https://t.co/z2Q0jU1ep2— Arulnithi tamilarasu (@arulnithitamil) July 15, 2021
இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடித்துள்ளார் . மேலும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராண் எதான் யோகன் இசையமைத்துள்ளார் . சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் டைரி படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .