Categories
சினிமா மாநில செய்திகள்

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு….. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!!!

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி நேற்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார்.

இந்நிலையில் நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி உடல்நலக் குறைவுக் காரணமாக, பெங்களூருவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன். தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |