Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ஆர்யா ஏமாத்திட்டாரு…! எனக்கு நியாயம் வேணும்…. இளம்பெண் பரபரப்பு புகார் …!!

திருமணம் செய்வதாக கூறி ஆர்யா ஏமாற்றிவிட்டதாக ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் புகார் அளித்துள்ளார்.

நடிகர் ஆர்யா ஜெர்மனியில்  வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி லட்சக்கணக்கில் அவரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விட்ஜா என்ற இலங்கை தமிழ் பெண் ஜெர்மனி குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். அவர் அந்நாட்டு சுகாதார துறையில் வேலை செய்கிறார் . இது பற்றி விட்ஜா கூறுகையில், ஆர்யா தன்னை திருமணம் செய்வதாக கூறி ரூபாய் 70,40,000 ரூபாய் கைப்பற்றி பிறகு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார். தற்போது விட்ஜா இது பற்றி இந்திய பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார்.

மேலும் விட்ஜாவுக்கும்  – நடிகர் ஆர்யா அம்மாவுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதங்கள் பணம் கொடுத்த ஆதாரங்கள் போன்றவற்றையும் இந்த புகாரில் இணைத்துள்ளார். இது குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆர்யா லாக்டவுன்  காலங்களில் படங்கள் ஏதும் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது அவர் விட்ஜாவிடம் பணம் கேட்டதாகவும் அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அனால் தற்போது அதனை தராமல் ஏமாற்றி விட்டார் .மேலும் இதுகுறித்து ஆர்யாவின் அம்மா விட்ஜாவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி உள்ளதாகவும் கூறியுள்ளார் .

இது  குறித்து ஆர்யா விட்ஜாவிடம் இதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். என்னை அவர் மிரட்டினாலும் நான் வாபஸ் பெறப்போவதில்லை என்று இவர் உறுதியாக கூறியுள்ளார். இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்களுக்கு ஒரு தீர்வு வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |