Categories
சினிமா

“நடிகர் எஸ்.வி.சேகர் மீதான வழக்கு”…. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு……!!!!!

தமிழ்நாடு கவர்னராக பன்வாரிலால் புரோகித் இருந்த போது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது குறித்து கவர்னர் வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூகவலைதளங்களில் பரவிய ஒரு அவதூறு தகவலை பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் மறுபதிவு செய்து பகிர்ந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி, எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

அப்போது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜாரன வக்கீல், சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை மனுதாரர் நீக்கியதோடு, அது குறித்து மன்னிப்பும் கேட்டுவிட்டார். இந்த உயர்நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறார் என்று தெரிவித்தார். இந்த நிலையில் காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், இவ்வழக்கு விசாரணைக்கு ஒருமுறை கூட போலீஸ் முன்பு எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்று தெரிவித்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அமெரிக்காவிலுள்ள நபர் ஒருவரின் கருத்தை படித்து பார்க்காமல் துரதிஷ்டவசமாக அதை மனுதாரர் மறுபதிவு செய்து விட்டார்.

அவர் தன் தவறுக்கு நிபந்தனை அற்ற மன்னிப்பு கேட்பதாக சொல்லி மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் போலீஸ் விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக தயாராகவுள்ளார் என்று எஸ்.வி.சேகர் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எஸ்.வி.சேகர் மீது 4 வழக்குகள் இருக்கின்றன. இந்த 4வழக்குகளுக்கும் தனித்தனியே நிபந்தனை அற்ற மன்னிப்பு கோருவது குறித்த பிரமாணபத்திரங்களை அவர் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவு பிறப்பித்தார்.

Categories

Tech |