தமிழ் சினிமாவில் குருவி படத்தின் மூலம் தயாரிப்பதாக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வந்தார். அதன் பிறகு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றியே பெறவே நடிகர் தயாரிப்பாளர் என பிசியாக தமிழ் சினிமாவில் வளம் வர தொடங்கினார். தற்போது வெற்றிகரமாக நடிகராகவும் தயாரிப்பாளராகவும் உதயநிதி திகழ்கிறார். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன், கமல் தயாரிக்கும் ஒரு படம் என பிசியாக நடித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உதயநிதி படங்களை வாங்கி வெளியிடுவதில் தீவிரமாக இருக்கிறார்.
விஜய், அஜித், ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்களின் படங்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்ட பல படங்கள் மிகப் பெரிய வெற்றியை பெற்று உள்ளது. இதனையடுத்து உதயநிதி மற்றும் கமல் கூட்டணியில் முதல் முதலில் உருவான திரைப்படம் தான் மன்மதன் அம்பு. உதயநிதி தயாரிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படம் தோல்வியை சந்தித்தது. இது குறித்து பேசிய உதயநிதி, நான் உலக நாயகன் கமலின் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டேன். அப்போது கமல் எனக்கு ஒரு கதை கூறினார். ஆனால் நான் கமலின் படங்களான தேனாலி, பஞ்சதந்திரம் பாணியில் ஒரு காமெடி படத்தை தயாரிக்க விரும்புவதாக கூறினேன். நான் சொன்னதற்காக கமல் உருவாக்கிய கதைதான் மன்மதன் அன்பு. ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை. அந்த படம் தோல்விக்கு நான் தான் காரணம் என்று உதயநிதி கூறினார்.